புதுதில்லி,நவ.16- விண்வெளிக்கு மனிதர் களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான வீரர்கள் தேர்வில் இந்திய விமானப் படை விமானிகள் பலர் கலந்துகொண்டனர். ரஷ்ய நாட்டின் நிபு ணர்கள் மூலம் நடைபெற்ற தேர்வில் 60 விமானிகளில், 12 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த 45 நாட்களாக ரஷ்யா வில் பயிற்சி பெற்று வரு கின்றனர். அவர்களுள் 7 பேர் தற்போது பயிற்சியை முடித் துள்ள நிலையில், இறுதி யாக 3 வீரர்கள் தேர்வு செய் யப்படுவதாக கூறப்படுகிறது. முதற்கட்ட தேர்வில் வெளியேறியவர்களில் பல ருக்கும் பற்கள் தொடர்பான பிரச்சனை இருந்ததால், விண்வெளியிலுள்ள சூழ் நிலை மாற்றத்தால் அவர்க ளுக்கு மேலும் பாதிப்பு ஏற் படும். இதுதான் அவர்கள் தேர்வு ஆகாததற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.